[X] Close

மகளின் திருமணத்தில் முகேஷ் அம்பானியின் டான்ஸ்: நெட்டிசன்கள் கிண்டல்


mukesh-ambani-dance

  • kamadenu
  • Posted: 11 Dec, 2018 13:25 pm
  • அ+ அ-

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மகள் இஷா அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடியது நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷா அம்பானியும்,  பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் அஜய் பிராமலின் மகனான ஆனந்த் பிரமோலும்  காதலித்து வந்தனர்.

பள்ளிக்கால நண்பர்களான இவர்கள் இருவருக்கும் கடந்த மே மாதம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 50-க்கும் மேலான வகை சாப்பாடு, மூன்று நாள் கொண்டாட்டம் என நடைபெற்ற  நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அம்பானி வீட்டுத் திருமணத்துக்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டன. தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல திருமண நிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருமணத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

திருமணத்தின் ஒருபகுதியாக சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அப்போது நீல நிற சூட் அணிந்து அவர்களுடன் நடனமாடினார் முகேஷ் அம்பானி. அவரின் நடன அசைவுகளை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவருக்கு டான்ஸ் ஆடத் தெரியவில்லையே என்ற ரீதியில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close