[X] Close

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்: கமல்நாத் நம்பிக்கை


kamal-nath-confident-of-congress-victory-in-mp

  • kamadenu
  • Posted: 11 Dec, 2018 11:43 am
  • அ+ அ-

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கூறியுள்ளார்.

மத்தியபிரதேசத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் - பாஜக இடையே குறைந்த அளவு வித்தியாசங்களே இருந்தாலும் காங்கிரஸே தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கிறது.

"நான் முன்னமே சொன்னது போல காங்கிரஸ் வெற்றிபெறுகிறது. நாங்கள் தனிப்பெரும்பான்மை பெறப்போகிறோம்" என மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நவம்பர் 28 அன்று மத்தியபிரதேச தேர்தல் நடந்து முடிந்தது. 2,899 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 250 பெண்களும், 5 மாற்றுப் பாலினரும் அடங்கும். 75 சதவித வாக்குகள் பதிவாகின. 

பெரும்பாலான தேர்தல் கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியையே கணித்திருந்தன. 

- ஏ.என்.ஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close