[X] Close

இது மக்கள் தீர்ப்பு; ஜனநாயகத்தின் வெற்றி!- மம்தா பானர்ஜி


people-voted-against-bjp

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Dec, 2018 11:39 am
  • அ+ அ-

நடந்து முடிந்து 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகுத்து வரும் நிலையில், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்கள் தீர்ப்பு; மக்கள் பெற்றுள்ள வெற்றி. ஜனநாயகம் பெற்றிருக்கும் வெற்றி.

அநீதிக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிரான வெற்றி. சுயாட்சி அமைப்புகளை சீர்குலைத்ததற்கு எதிரான வெற்றி.

மத்திய நிறுவனங்களை தவறாக பயன்படுத்தியற்கு எதிரான வெற்றி. ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பொதுப் பிரிவினர் என எல்லோரும் வேலையில்லாமல் தவிக்க விடப்பட்டதால் ஏற்பட்ட வெற்றி.

இது 2019-ம் ஆண்டும் இறுதி போட்டிக்கான உண்மையான ஜனநாயக உதாரணம். ஜனநாயக ஆட்டத்தில் மக்கள்தான் எப்போதுமே ஆட்ட நாயகர்கள். வெற்றி பெற்றவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close