[X] Close

ட்விட்டர் இந்தியா ட்ரெண்டிங்: 5 மாநிலத் தேர்தல் ஹேஷ்டேகுகளின் ஆதிக்கம்


twitter-india-trends-assembly-election-related-hashtags-trend

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Dec, 2018 11:23 am
  • அ+ அ-

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் ட்விட்டர் இந்தியா ட்ரெண்டிங்கில் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஹேஷ்டேகுகளே அதிகளவில் உள்ளன. முதல் 10 ஹேஷ்டேகுகளில் 9 ஹேஷ்டேகுகள் தேர்தல் முடிவு தொடர்பாகவே உள்ளன.

#Results2018 #AssemblyElections208 #MadhyaPradeshElections2018 #ChattisgarhElections2018 #MizoramElections2018 #AkbarudinOwaisi #Chattisgarh ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. அதேசமயம், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக கடந்த 7-ம் தேதி முடிந்தது.

2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுவதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close