[X] Close

தெலங்கானா தேர்தல்: அக்பருதீன் ஓவைஸி வெற்றி


chandrayangutta-continues-to-be-aimim-s-turf

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Dec, 2018 11:09 am
  • அ+ அ-

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைஸி சந்திராயன்குட்டா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலங்கானாவில் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி- 85, காங்கிரஸ்- 22, பாஜக- 6 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில், சந்திராயன்குட்டா தொகுதியில் போட்டியிட்ட அக்பருதீன் ஓவைஸி வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மஜ்லிஸ் பச்சாவோ கட்சியின் வேட்பாளரைவிட 59,274 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலங்கானா தேர்தலைப் பொருத்தவரை டிஆர்எஸ் கட்சி 50.3% வாக்குவங்கியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 8.9%, ஓவைஸியின் கட்சி 4.9%, தெலுங்குதேச கட்சி 1.9% என்ற அளவில் வாக்குகள் பெற்றுள்ளன.

தெலங்கானாவில் டிஆர்எஸ், ஓவைஸியின் கட்சியும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளும் இணைந்து களம் கண்டன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close