மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் தபன் குமார் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு


புதுடெல்லி: மத்​திய புல​னாய்வு அமைப்​பின் இயக்​குநர் தபன் குமார் தேகா​வின் பதவிக் காலம் மேலும் ஓராண்​டுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இமாச்சல பிரதேச மாநில பிரி​வில் கடந்த 1998-ம் ஆண்டு ஐபிஎஸ் அதி​காரி​யாக தேர்​வானவர் தபன் குமார் தேகா. பல்​வேறு பதவி​களை வகித்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்​திய புல​னாய்வு அமைப்​பின் (ஐ.பி.) இயக்​குந​ராக நியமிக்​கப்​பட்​டார். இவருடைய 2 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிய இருந்த நிலை​யில் ஓராண்​டுக்கு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட்​டது. வரும் ஜூன் 30-ம் தேதி​யுடன் அவருடைய பணிக் காலம் முடிய இருந்​தது.

இந்​நிலை​யில், மத்​திய பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஐ.பி. இயக்​குநர் தபன் குமார் தேகா​வுக்கு மேலும் ஓராண்​டுக்கு (2026 ஜூன் வரை) அல்​லது மறு உத்​தரவு வரும் வரை பணி நீட்​டிப்பு வழங்க மத்​திய அமைச்​சர​வை​யின் நியமனக் குழு ஒப்​புதல் வழங்கி உள்​ளது” என கூறப்​பட்​டுள்​ளது.

தபன் குமார் தேகா, தீவிர​வாதம் மற்​றும் மத அடிப்​படை​வாதம் தொடர்​பான வழக்​கு​களை கையாள்​வ​தில் நிபுணத்​து​வம் பெற்​றவர். பாகிஸ்​தான் தீவிர​வாத வழக்​கு​களை கையாள்​வ​தி​லும் இவர் சிறந்து விளங்​கு​கிறார். குறிப்​பாக, கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தீவிர​வாத தாக்​குதலுக்கு எதி​ரான பாது​காப்​புப் படை​யினரின் நடவடிக்​கைக்கு இவர் தலைமை தாங்​கி​னார்.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய பாது​காப்​புப் படை​யினர் தாக்​குதல் நடத்​திய நிலை​யில் ஐ.பி. இயக்​குநருக்கு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட்​டிருப்​பது முக்​கி​யத்​து​வம்​ வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது.

x