விஜயவாடா: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரோஹிங்கியா அகதிகளின் ஊடுருவலால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேலும் உள் நாட்டவருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகிறது. ஆதலால் ஆந்திராவில் ரோஹிங்கியா அகதிகளை அடையாளம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நாட்டின் பாதுகாப்பு கருதி, ஆந்திராவில் தீவிரவாதிகளின் நடமாட்டம், அவர்களுக்கு உதவி புரிவோரின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.