கர்னல் சோபியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கு ம.பி. அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு


விஜய் ஷா

புதுடெல்லி: பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை குறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்​ரி, கர்​னல் சோபியா குரேஷி, விங்கமாண்​டர் வியோமிகா சிங் ஆகியோர் அவ்​வப்​போது ஊடகங்​களுக்கு பேட்டி அளித்​தனர். இந்​நிலை​யில், மத்​திய பிரதேச மாநில அமைச்​சர் விஜய் ஷா ராணுவ அதி​காரி கர்​னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் கருத்து தெரி​வித்​திருந்​தார். இவரது கருத்​துக்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்​டனம் தெரி​வித்​தன.

இந்​நிலை​யில், இந்த விவ​காரத்​தில் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்த மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றம், விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கு​மாறு மாநில காவல் துறை தலை​வருக்கு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, விஜய் ஷா மீது காவல் நிலை​யத்​தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டது..

இதையடுத்​து, உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்​கக் கோரி​யும் முன்​ஜாமீன் கோரி​யும் விஜய் ஷா சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.
அப்​போது, நீதிப​தி​கள் கூறும்​போது, “அமைச்​சரின் இந்த கருத்து ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது.

அரசி​யலமைப்பு பதவி​யில் இருப்​பவர்​கள் பேச்​சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்​டும். ஒரு நாளில் ஒன்​றும் நடந்​து​வி​டாது. முன்​ஜாமின் வழங்க முடி​யாது. உயர் நீதி​மன்​றத்​தில் அமைச்​சர் மன்​னிப்பு கேட்க வேண்​டும். இந்த மனுவை வெள்​ளிக்​கிழமை வி​சா​ரணைக்​கு எடுத்​துக்​ கொள்​கிறோம்​” என்​றனர்​.

x