வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணை மே 20-க்கு ஒத்திவைப்பு


புதுடெல்லி: மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள வக்பு திருத்த சட்​டத்தை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் அமைப்​பு​கள் சார்​பில் 100-க்​கும் மேற்​பட்ட மனுக்​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த மனுக்​கள் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான கபில் சிபல் மற்​றும் மத்​திய அரசின் வழக்​கறிஞர் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரிடம் வரும் திங்​கள்​கிழமைக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மான வாதங்​களை தாக்​கல் செய்​யு​மாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

மேலும், வக்பு திருத்த சட்​டத்தை எதிர்த்த மனுக்​கள் மீதான விசா​ரணையை வரும் செவ்​வாய்க்​கிழமைக்கு (மே 20 ) ஒத்​தி​வைத்த தலைமை நீதிப​தி, அன்​றைய தினம் இடைக்​கால நிவாரணம் வழங்​கு​வது குறித்து நாங்​கள் பரிசீலனை செய்​வோம்​ என்​றார்​.

x