புதுடெல்லி: பிஹாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று மாணவர்களுடன்
கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரி வருகிறது. இது தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.
கோரிக்கை நிறுவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இங்குள்ள அரசு, தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக செயல்படுகிறது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளும்போது, தெலங்கானா அரசு மேற்கொண்ட முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்” என்றார்.
அம்பேத்கர் விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாட ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என்றாலும் அதன் வளாகத்தில் நுழைந்து மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.