வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்புக்கு குண்டு துளைக்காத கார்


புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு மத்திய அரசு குண்டு துளைக்காத கார்களை வழங்கியுள்ளது. அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது சிஆர்பிஎப் சார்பில் ‘இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர் பயணிக்கும் இடங்களில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய 6 வீரர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். இதுதவிர அவரது வீட்டுக்கு 10 வீரர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து எஸ்.ஜெய்சங்கருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என டெல்லி காவல் துறையை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து எஸ்.ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆய்வு செய்யப்பட்டு அவரது பாதுகாப்புக்கு 2 குண்டு துளைக்காத கார்கள் வழங்கப்பட்டுள்ளன.

x