பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் பற்றிய தகவலுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அறிவிப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்களை பற்றிய தகவலுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த சுவரொட்டிகள் புல்வாமாவின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

அனந்தநாக்கை சேர்ந்த ஹுசைன் தோக்கர், பாகிஸ்தானை சேர்ந்த அலிபாய் (எ) தல்காபாய், ஹசீம் மூசா (எ) சுலைமான் ஆகிய 3 தீவிரவாதிகளின் படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் மூவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

x