குஷிநகர்: உ.பி. மாநிலம் குஷிநகர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கே.ஷாஹி கூறியதாவது: கடந்த 10, 11-ம் தேதிகளில் குஷிநகர் மருத்துவமனையில் 17 பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகள் அனைவருக்கும் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என்று அவர்களது பெற்றோரும், உறவினர்களும் பெயர்சூட்டி மகிழ்ந்தனர். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தையின் தாயான அர்ச்சனா என்பவர் கூறும்போது, "தற்போது சிந்தூர் என்பது ஒரு வார்த்தையாக மட்டுமல்லாமல் மக்களின் உணர்வாக மாறிவிட்டது" என்றார்.