பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட திரைப்படம், வெப் சீரிஸ், பாடல் உள்ளிட்ட உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்கு இந்திய ஓடிடி தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், "பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், பாடல்கள், போட்காஸ்ட், வெப்-சீரிஸ் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் மீடியா உள்ளடக்கங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
இவற்றை இந்தியாவில் செயல்படும் ஓடிடி தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், சந்தா அடிப்படையிலோ அல்லது வேறு விதமாகவோ ஒளிபரப்பினால் அதை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.