[X] Close
 

ஹாட்லீக்ஸ் : மன்னர் ஆட்சி க்ளோஸ்!


hot-leaks-suba-thangavelan

சுப.தங்கவேலன்

  • kamadenu
  • Posted: 12 Jul, 2018 11:51 am
  • அ+ அ-

சமஸ்தானம் இருந்த பூமி என்பதாலோ என்னவோ, ராமநாதபுரம் திமுக-வில் குறுநில மன்னர் போல் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார் சுப.தங்கவேலன்.

 அது இப்போது முடிவுக்குவந்திருக்கிறது. 

1986-லிருந்து மாவட்டச் செயலாளராகவும், இருமுறை அமைச்சராகவும் இருந்த சுப.தங்கவேலன், மாவட்டத்தில் யாரும் தன்னை மீறிவிடாமல் ‘கவனமாக’ப் பார்த்துக் கொண்டார். தனது மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம், கருணாநிதியிடம் பழங்கதை சொல்லி பதவியைத் தனது மகன்களுக்கு வாங்கிக்கொண்டவர். 

ஆனால், கடந்த தேர்தலில் மாவட்டச் செயலாளராக இருந்தும் கருணாஸிடம் மோசமான தோல்வியைச் சந்தித்தார் தங்கவேலனின் மகன் திவாகர். இந்த நிலையில், தொடர்ச்சியாக 32 ஆண்டுகள் தங்கவேலனின் குடும்பத்தைச் சுற்றிவந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து திமுக சொத்துப்பாதுகாப்புக்குழு முன்னாள் உறுப்பினர் காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமியின் மகன் முத்துராமலிங்கத்திடம் கொடுத்து விட்டார் ஸ்டாலின்!

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close