[X] Close
 

ஹாட் லீக்ஸ்: டவர் போட்டா என்னாகும் தெரியுமா?


narendra-modi-tower-hot-leaks

  • kamadenu
  • Posted: 07 Jun, 2018 09:46 am
  • அ+ அ-

ஏப்ரலில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிராக ‘கறுப்பு மய’ ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே கிடுகிடுத்தன. அந்தச் சமயத்தில் கோட்டையின் மேல்தளத்தில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு நேர் மேலே ‘கம்யூனிகேஷன் டவர் ’ ஒன்றை அமைக்க மத்திய உள்துறை மெனக்கெட்டது. இதற்குத் தமிழகக் காவல் துறையும் தலையாட்டும் முடிவில் இருந்ததாம்.

ஆனால், கடைசி நேரத்தில் இதில் தலையிட்ட புத்திசாலி போலீஸ் அதிகாரிகள் சிலர், “முதல்வர் அலுவலகத்துக்கு மேலே டவர் இருந்தால், டெல்லியில் இருந்தபடியே இங்கு நடக்கும் அனைத்தையும் கிரகித்து விடலாமே!” என்று அபாய மணி அடித்தார்களாம். அப்புறம்தான் அதிகாரிகளுக்கு சுள்ளெனத் தைத்து, டவருக்கு ‘நோ’ சொன்னார்களாம்.

இதேபோல், தலைமைச்செயலக வளாகத்தின் பாதுகாப்பைக் கருதி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களைக் கண்காணிக்கும்பொறுப்பை போலீஸ் வசம் கொடுக்க முதலில் முடிவானதாம். இதிலும் குறுக்கிட்ட இரண்டு அதிகாரிகள், “இதை போலீஸ் வசம் கொடுத்தால் சிக்கலாகும்” என்று எச்சரித்தார்களாம். இதையடுத்து, கேமராக்களைக் கண்காணிக்கும் பொறுப்பை பொதுத்துறை வசம் ஒப்படைக்க இப்போது முடிவாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close