டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது: ரிசல்ட் பார்ப்பது எப்படி?


சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பாரஸ்டர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6224 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி என்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4ல் 6224 காலியிடங்கள் முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. பின் மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று தற்போது குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. www.tnpscresults.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை பார்க்கலாம். அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்திலும் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை பார்க்கலாம்.

x