தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் 11 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11-ம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மழை ஓய்ந்து தேங்கியிருந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் நேற்று முதல் அரையாண்டு தேர்வுகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர் 22- ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் முன்பே அறிவித்திருந்த அரையாண்டு விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...