உடற்கல்வி, விளையாட்டு படிப்புகளுக்கு ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்!


சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் லில்லி புஷ்பம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மேலகோட்டையூரில் அமைந்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி, விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு மேலாண்மை, ஊட்டச்சத்து, விளையாட்டு பயிற்சி, விளையாட்டு தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பான இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

2024-2025-ம் கல்வி ஆண்டில் இப்படிப்புகளில் சேருவதற்கு தற்போது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பிளஸ் 2முடித்தவர்கள், பட்டதாரிகள் www.tnpesu.orgஎன்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜுன் மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.