கோவை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து வரவேற்பு


கோவை அரசு கலை கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு  மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ - மாணவியருக்கு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை அரசு கலை கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.

இதையொட்டி கல்லூரி முதல்வர் எழிலி முன்னிலையில் ஆசிரியர்கள் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் கல்லூரி நுழைவாயிலில் நின்று முதலாம் ஆண்டு மாணவ - மாணவியருக்கு பூக்களை வழங்கி பன்னீர் தெளித்து வரவேற்பளித்தனர். முதலாம் ஆண்டு மாணவ - மாணவியருடன் வந்திருந்த பெற்றோர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.