குரூப் ஏ, பி, சி அதிகாரிகள் ஆன்லைன் படிப்புகளை முடிப்பது கட்டாயம்: புதுச்சேரி அரசு புது உத்தரவு


புதுச்சேரி: திறன்களை மேம்படுத்த குரூப் ஏ, பி, சி அதிகாரிகள் மத்திய அரசின் கர்மயோகி ஆன்லைன் தளத்தில் ஆன்லைன் படிப்புகளை முடிக்க வேண்டும் என்று நிர்வாகச் சீர்த்திருத்தப் பிரிவு துறைத் தலைவர்களுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி அரசின் சார்பு செயலர் உதயக்குமார் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் பிறப்பித்த உத்தரவு: குரூப் ஏ, பி, சி அதிகாரிகள் திறன்களை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆன்லைன் பயிற்சி கட்டாயமாக்கப் படுகிறது. அரசு ஊழியர்களுக்கு விரிவான பயிற்சி தர ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி போர்டலாக கர்மயோகி ஆன்லைன் தளத்தை மத்திய அரசு வடிமைத்துள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளும் கர்மயோகி ஆன்லைன் தளத்தில் பதிவு செய்து ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

குரூப் ஏ, பி அதிகாரிகள் 4 குறுகிய கால படிப்புகளையும், குருப் சி அதிகாரிகள் 3 குறுகிய கால படிப்பு களையும் ஆன்லைனில் முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.