யோகா தினம்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்


சென்னை: யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிலையங்களில் யோகா தினத்துக்கான கவுன்ட்-டவுனை தொடங்கி, அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். நிகழ்ச்சி நிரல்களை பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பரவலாக பலரை யோகாசென்றடையவும், அவர்களது அன்றாட வாழ்வில் யோகாவை இணைப்பதற்கும் கல்வி நிறுவனங்களின் இந்த முன்முயற்சி ஊக்கமளிக்கும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் (https://yoga.ayush.gov.in/YAP/CYP/CYP-Home?lang=en) வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.