பொறியியல் சேர்க்கை இதுவரை 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்


சென்னை: பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

2024-2025-ம் கல்வி ஆண்டில் பி.இ., பிடெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 6-ம் தேதிதொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 28-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 22 ஆயிரத்து 802 பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 863 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜுன் 6-ம் தேதி கடைசி நாள் ஆகும்.