[X] Close

பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்த பேருந்து: விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்


bus-accident

திருச்சியை அடுத்த ராம்ஜிநகரில் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.படம்: ஜி.ஞானவேல்முருகன்

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 12:12 pm
  • அ+ அ-

திருச்சி

திருச்சி ராம்ஜிநகர் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு பயணிகள் நிழற் குடைக்குள் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் எட்டரை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் மதுக்குமார்(45), பவித்திரன் (24), ராஜமாணிக்கம் (29). இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மணிகண்டத்துக்கு புறப்பட்டனர். ராம்ஜிநகர் மில்கேட் அருகே சாலையை கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து தேனி நோக்கி சென்ற அரசுப் பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அப்போது அந்த பேருந்து நிலைதடுமாறி சாலையின் பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 2 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதிவிட்டு பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் மதுக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும், அவருடன் வந்த பவித்திரன், ராஜமாணிக்கம், நிழற்குடையில் நின்று கொண்டி ருந்த கெம்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (17) ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்த ராம்ஜிநகர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்த மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநரான தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த முனியாண்டி யிடம்(40) விசாரித்து வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close