நீலகிரி: கோத்தகிரி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் உள்ளார். இவர், 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி சிறுமியின் பெற்றோர் வேலை விஷயமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்றிருந்தனர். வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகேஷ்குமார் சோனி குதுரா (22) என்பவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, பாலியல் தொல்லை கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இது குறித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் ரவி, காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முகேஷ்குமார் சோனி குதுராவை கைது செய்தனர்.