மணப்பாறை அருகே மண்வெட்டியால் அடித்து தந்தை கொலை: மகன் கைது


திருச்சி: மணப்பாறை அருகே சங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சின்னத் தம்பி (85). இவரது மகன் செல்வம் (57). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சின்னத்தம்பி - செல்வம் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, செல்வம் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து சின்னத்தம்பியை அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சின்னத்தம்பியை, அவரது மருமகளும், செல்வத்தின் மனைவியுமான மலர், மணப்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சின்னத்தம்பி உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், சின்னத் தம்பி உடலை வீட்டுக்கு மலர் எடுத்துச் சென்றுவிட்டார். இது குறித்து தகவலறிந்த மணப்பாறை டிஎஸ்பி ராதா கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சின்னத் தம்பி உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

x