கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீஸார் கல்வராயன்மலையில் சோதனை நடத்தினர். அப்போது பெருமாநத்தம் மலைக் கிராமத்தில் சேகர் என்பவரின் மனைவி சரிதா (33) என்பவர் தனது விவசாய நிலத்தில் கள்ளச்சாராய ஊறல் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த இடத்தில் இருந்து 250 லிட்டர் மற்றும் 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த மது விலக்கு போலீஸார், வழக்கு பதிவு செய்து சரிதாவை நேற்று கைது செய்தனர்.