தேனி: பழனி வட்டம் குதிரையாறு அணை பகுதியைச் சேர்ந்த மினி பேருந்து ஓட்டுநர் மணிகண்டன் (35) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் பொள்ளாச்சி அருகே சூலேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சம்யுக்தா(21) என்பவருடன் பழகி வந்துள்ளார்.
குடும்பத்தில் பிரச்சனை ஏற்படவே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியேறி உள்ளனர். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளை சுற்றிப் பார்த்த இவர்கள், நேற்று முன்தினம் இரவு தேனி அருகே குன்னூர் தண்டவாளப் பகுதிக்கு வந்தனர்.
பின்னர், போடியில் இருந்து சென்னைக்குச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தேனி ரயில்வே போலீஸார் அவர்கள் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.