மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே வல்லம் சேத்தி தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் அபிமன்யு(23), முத்தரசன்(28). இவர்கள் இருவரும் 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி, விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சகோதரர்கள் இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.