மேல்மலையனூர் அருகே ஏரிக்கரையில் இளைஞர் மர்ம மரணம்: போலீஸார் விசாரணை


விழுப்புரம்: மேல்மலையனூர் அடுத்த சங்கிலிக்குப்பம் ராமாபுரம் ஏரிக்கரை அருகே நேற்று இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மேல்மலையனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்தவர் மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் அஜீத்குமார் (26) என்பதும், அவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் வாகனத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x