திண்டுக்கல்: பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே உள்ள பெத்த நாயக்கன் பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (21). இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பழநி தாலுகா போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
கடந்த ஆண்டு வேறொரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ வழக்கில் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தற்போது மீண்டும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.