அரியலூர்: செந்துறை அருகேயுள்ள வஞ்சினாபுரம் காலனி தெருவுக்கு நேற்று முன்தினம் வந்திருந்த பாம்பை வைத்து வித்தை காட்டும் நபர் ஒருவர் வந்துள்ளார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து தோஷம் நீக்குகிறேன் என கூறிய அந்த நபர், இளவழகன் மனைவி ஜெயக்கொடி (48) என்பவர் வீட்டுக்குச் சென்று தோஷம் நீக்க ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில், அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் என ஒரு பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த நபர், ஜெயக்கொடி அசந்த நேரத்தில், நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து செந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையை ஏமாற்றி பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.