ஜார்க்கண்டில் இருந்து ரயிலில் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி


ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் செல்லும் எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி செல்வதாக சென்னை ரயில்வே குற்றப் புலனாய்வு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, சென்னை பெரம்பூரில் இருந்து அரக்கோணம் வரும் வழியில் பொதுப்பெட்டியில் காவல்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் இருக்கைக்கு கீழே கேட்பாரற்றுக்கிடந்த 3 பைகளில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சாவை கைப்பற்றி அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் கஞ்சா கடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x