விருத்தாச்சலம் அருகே சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி தாலி கட்டிய இளைஞர்: குண்டர் சட்டத்தில் கைது


கடலூர்: விருத்தாசலம் அருகே பள்ளிக்குச் சென்ற 15 வயது சிறுமியை திட்டக்குடி மேலிருளம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திகேயன் (34) என்பவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, தாலி கட்டினார்.

இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி விசாரணை மேற்கொண்டு கார்த்திகேயனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தார்.

இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர் மத்திய சிறையில் இருந்த கார்த்திகேயனிடம் இதற்கான உத்தரவு நகலை போலீஸார் வழங்கினர்.

x