விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் தலைமையில் தனிப்படை போலீஸார் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து வந்தவரை வழிமறித்து விசாரித்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை சோதனை செய்ததில், உடல் முழுவதும் புதுச்சேரி மதுபாட்டில்களை ஒட்டி பேருந்தில் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த நாகமணி (40) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 90 மில்லி அளவு கொண்ட 100 மதுபாட்டில்களும், 180 மில்லி அளவு கொண்ட 20 மதுபாட்டில்கள் என 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீஸார் நாகமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.