ஓசூர்: கெலமங்கலம் அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்


கோப்புப் படம்

ஓசுர்: கெலமங்கலம் அருகே மணல் கடத்திய 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பிதிரெட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த லாரியை சோதனை செய்தனர்.

இதில் 6 யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஏஓ முருகன் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல போடிச்சிப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்தபோது 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஏஓ வினோத் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

x