பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக காரில் கடத்தல்: 314 கிலோ குட்கா பறிமுதல்


ஓசூர்: பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ குட்காவை காருடன் பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 314 கிலோ குட்கா, 48 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 120.

விசாரணையில், பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு குட்கா, மதுபாக்கெட்டுகள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், குட்கா, மதுபாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x