திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி நகைக்கடையில் 9.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை காவல் துறை யினர் கைது செய்தனர்.
நாட்றாம்பள்ளி காவல் நிலையம் சந்தைமேடு பகுதியில் விநாயகம் (58) என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த 1-ம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்குவதற் காக வந்துள்ளார். கடையில் உள்ள தங்க நகைகளை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி சுமார் 9.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றார்.
இதுதொடர்பாக விநாயகம் அளித்த புகாரின்பேரில், நாட்றாம் பள்ளி காவல் ஆய்வாளர் மங்கை யர்கரசி வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில், தங்க நகைகளை திருடிச் சென்றதாக ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்கிற நேத்ரா (40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து விநாயகத்தின் நகைக்கடையில் இருந்து திருடிச் சென்ற தங்க நகைகளை நேற்று பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறை யினரை எஸ்.பி., ஷ்ரேயா குப்தா பாராட்டினார்.