தூத்துக்குடியில் பிரபல பிரியாணி கடையில் இருந்து கெட்டுப்போன சிக்கன் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், கடையின் உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த லிவிங்ஸ்டா என்பவர் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அனிபா பிரியாணி என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். ‘பிரியாணிகளின் அரசன்’ என்ற விளம்பரத்தோடு இந்த கடையை அவர் நடத்தி வருகிறார். இந்த கடையில் இன்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது கடையில் நேற்று சமைத்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், ஒன்றரை கிலோ மீன் வகைகள், 3 கிலோ சாதம், 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், இரண்டரை கிலோ பிரட் அல்வா, நூடுல்ஸ், சப்பாத்தி மாவு, மைதா மாவு, தேதி குறிப்பிடாத சோயா சாஸ் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதை கொட்டி அளித்தனர். மேலும் சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
மேலும் உணவகம் நடத்துவதற்கு உணவு பாதுகாப்பு உரிமம் அனுமதி பெறாமல் ரெஸ்டாரண்ட் நடத்தியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை உரிமத்தை ரத்து செய்து தற்காலிகமாக கடையை இயக்க தடை விதித்தனர். இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!
பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்ஷன்... வைரலாகும் வீடியோ!
ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!
ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!
டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!