கேரளாவில் வழிப்பறிக் கொள்ளை... 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் தமிழகத்தில் கைது!


மனோஜ்

கேரளாவில் வழிப்பறிக் கொள்ளை வழக்கில் 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம் பாலமேல் முட்டுக்காட்டுக்கரையைச் சேர்ந்தவர் ஆர்.டி.வர்கீஸ். இவர் கடந்த 2007 மார்ச் 31-ம் தேதி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டநாடு கிர்வான்வேஹியா என்ற இடத்தில் அவரை வழிமறித்து தாக்கிய மர்மநபர் பணம், செல்போன், தங்க மோதிரத்தைப் பறித்துச் சென்றார்.

கேரளா போலீஸ்

இதுகுறித்து வர்கீஸ், காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது வர்கீஸிடம் நகை, பணம் பறித்தது பரம்பில் மனோஜ்(48) என்பவர் என்பது தெரிய வந்தது. அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தவுடன், பரம்பில் மனோஜ், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தலைமறைவானார்.

அவரை எஸ்.ஐ அந்தோணி, சிபிஓ சதீஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டம், அவினாசி பாரதி நகரில் பதுங்கிருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. அவரை போலீஸார் இன்று கைது செய்தனர். வழிப்பறி கொள்ளை வழக்கில் 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

x