ஹைதராபாத்தில் பயங்கரம்... பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறி 7 பேர் படுகாயம்!


தீப்பிடித்த எரிந்த பைக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், பவானிநகர் பகுதியில் சாலையில் நேற்று இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீப்பிடித்ததால், சாலையில் குதித்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனத்தை தண்ணீரை உற்றியும், ஈரமான சாக்குப்பை மூலமாக அணைக்க முயற்சித்தார். அவருக்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பலரும் உதவி புரிந்தனர். இந்நிலையில், இளைஞர் ஒருவர் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே நின்றபடியே தீயை அணைத்துக் கொண்டிருந்தார்.

தீப்பிடித்து எரிந்த பைக்

அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதில், இருசக்கர வாகனத்தை சுற்றி நின்றிருந்த7 இளைஞர்கள் மீது தீப்பிடித்து எரிந்தது. தீ உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில் ஒருவர் அலறி துடித்த போது அங்கிருந்து நபர் அவரை ஈர சாக்கு துணியால் போர்த்தி காப்பாற்றினார். இந்த விபத்தில் தீக்காயமடைந்த 7 பேரையும் மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அக்கம்பக்கத்தினர் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ இன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

x