திருத்தணி அருகே 10ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மேல் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி. இவரது மகள் குமாரி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார். இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் 187 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் அவர் 10 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் கவனிக்காத போது, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி குமாரி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
இதையும் வாசிக்கலாமே...