நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக செலுத்திய நபர்... மூடநம்பிக்கையால் விபரீதம்!


சத்தீஸ்கரில் நாக்கை வெட்டிக்கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நபர், இன்று தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை கிராமத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டம், அஞ்சோரா காவல் சௌக்கி எல்லைக்கு உட்பட்ட தனாட் கிராமத்தில் இன்று காலை ராஜேஷ்வர் நிஷாத் (33) என்பவர், கிராமத்தில் உள்ள குளத்துக்கு சென்றார். பின்னர், சில மந்திரங்களை ஓதிக் கொண்டு, அவர் தனது நாக்கை கத்தியால் வெட்டி, நீர்நிலையின் கரையில் ஒரு கல்லில் வைத்தார்.

மருத்துவமனையில் அனுமதி (கோப்பு படம்)

பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷ்வரை கண்ட கிராம மக்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கிராமவாசிகள் தகவல் படி, ராஜேஷ்வர் நிஷாத்தின் மனைவி வாய் பேச இயலாதவர். மேலும் தனது சில அபிப்பிராயங்களை நிறைவேற்றுவதற்காக தனது நாக்கை வெட்டி சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.

போலீஸ் விசாரணை

ஆனால் போலீஸார் தரப்பில் கூறுகையில், "இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நாக்கை வெட்டிக்கொள்ள, ராஜேஷ்வர் நிஷாத் பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம். இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் காரணமாக நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x