ஷாக்... தலை இல்லாமல் அரை நிர்வாணமாக கிடந்த இளம்பெண் உடல்: கொலையாளிகளுக்கு போலீஸார் வலை!


கொலை செய்யப்பட்ட உடலை மீட்டு மருத்துவமனை அனுப்பும் போலீஸார்.

பிஹாரில் இளம்பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு உடல் பாலத்திற்கு அடியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரை நிர்வாணமாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

பிஹார் மாநிலம், ஜமுய் மாவட்டம் அம்பா கிராமத்தில் புலியா பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் உள்ள கால்வாயில் இளம்பெண்ணின் உடல் நேற்று இரவு கிடந்துள்ளது இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஜமுய் ரயில் நிலையம்

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், பெண்ணின் உடலை கால்வாயில் இருந்து மீட்டனர். தலை இல்லாமல் அரை நிர்வாண நிலையில் அந்த பெண்ணின் உடல் இருந்தது. அத்துடன் அந்த பகுதியில் மதுபானம், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் கிடந்தன. அதனால், அந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு பின் தலையைத் துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

அப்பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் தலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மஞ்சள் நிற லெக்கின்ஸ் மட்டும் அந்த பெண் அணிந்திருந்தார். அவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அத்துடன் அருகில் உள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொண்டுள்ள புலியா போலீஸார், பெண்கள் காணாமல் போன வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் காணாமல் போன பெண்ணின் தலையை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x