விருதாச்சலம் அருகே தலைக் குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதாச்சலம் அடுத்த கர்ணத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவர் மங்கலம்பேட்டை பெல்லூர் புறவழிச் சாலையில் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேளாங்கண்ணியில் இருந்து ஆந்திர மாநிலம் முக்கிய சென்ற கார் சடகோபனின் காரை முந்தி செல்ல முயன்றது. அப்போது இரண்டு கார்களும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த விபத்து குறித்து மங்கலம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முந்தி செல்வதில் ஏற்பட்ட விபத்தால், நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.