நெல்லையில் ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் ரவுடி தீபக்ராஜா(30).

கடந்த 20-ம் தேதி பாளை யங்கோட்டை கே.டி.சி.நகர் நான்குவழிச் சாலை பாலம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இதில் தொடர்புடைய முக்கிய நபர் நவீன் மற்றும் நாங்குநேரியைச் சேர்ந்த முருகன், மேலச்செவலைச் சேர்ந்த லட்சுமி காந்தன், சேரன்மகாதேவியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸார், 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். லட்சுமிகாந்தன், சரவணன் ஆகியோர் போலீஸாரிடம் பிடிபட்ட நிலையில், நவீன் மற்றும் முருகன் ஆகியோர் காம்பவுன்ட் சுவர் ஏறி தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்ததில் நவீனுக்கு கையிலும், முருகனுக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இருவருக்கும் நெல்லை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.