அதிர்ச்சி... பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய அரசு மருத்துவர்கள்


பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண் ஒருவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ள சம்பவம் கிளிநொச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த ராஜதுரை சுரேஷ் என்பவர் தனது மனைவியை கிளிநொச்சி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சேர்த்திருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். ஆனால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இந்த நிலையில் மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளதாக ராஜதுரை சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

"தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம். தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ள ராஜதுரை சுரேஷ், மருத்துவர்களின் தவறினாலேயே இந்த செயல் நடைபெற்றுள்ளதாக கிளிநொச்சி தர்மபுரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். அரசு பொது மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ள சம்பவம் கிளிநொச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x