திமுக கவுன்சிலர் கொலையில் திடீர் திருப்பம்.. 7 சவரன் நகைக்காக தோழி செய்த கொடூரம் அம்பலம்!


திமுக கவுன்சிலர் ரூபா, அவரை கொலை செய்த தோழி கணவருடன்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி சோளக்காளிபாளைத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ரூபா கொலை வழக்கில் அவரது தோழி, கணவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பாலமலை காட்டுப்பகுதியில் கொடூரமான முறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரித்த க.பரமத்தி காவல் நிலைய போலீஸார், கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண், ஈரோடு மாவட்டம், கொடுமுடி சோளக்காளிபாளைத்தைச் சேர்ந்த ரூபா என்பதை கண்டறிந்தனர்.

அதோடு, ரூபா திமுக பேரூராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் இருந்த தீபாவின் உடல், கடந்த 26 -ம் தேதி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

நித்யா, கணவர் கதிர்வேல்

இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே விசாரணையில், தினந்தோறும் கரூருக்கு வரும் பேருந்தில் ரூபாவுடன் பயணிக்கும் நித்யா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நித்யாவிடம் ஏதாவது வேலை இருந்தால் கூறும்படி ரூபா தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று ரூபாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி பவுத்திரம் பாலமலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு 7 சவரன் தங்க செயின், கம்மல், வெள்ளி, கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. நித்யாவின் கணவர் கதிர்வேல் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததோடு, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததாக அவரையும் போலீஸார் கைது செய்தனர்.

நகைக்காக பழகிய தோழியை பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x