பைக்கில் கஞ்சா கடத்திய சென்னை இளைஞர் கைது @ ராமநாதபுரம்


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய இளைஞரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

ராமநாதபுரத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ராமேசுவரம் நெடுஞ்சாலையில் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாகன சோதனையின் போது ஸ்கூட்டர் ஒன்றை போலீஸார் சோதனையிட்டனர், சோதனையில் 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, ஸ்கூட்டரை ஓட்டி வந்த சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (26) என்ற இளைஞரை கைது செய்தனர்.

மேலும் கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேலும் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.