பகீர்.. ரத்த வெள்ளத்தில் துடித்த 3ம் வகுப்பு மாணவி... பலாத்காரம் செய்த பியூன் கைது!


பலாத்காரம்

ஒடிசாவில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் பியூன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் காஷிபூர் தொகுதிக்குட்பட்ட டோங்காசில் கிராமத்தில் ஆசிரமப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி அரசின் எஸ்.சி, எஸ்.டி மேம்பாட்டுத் துறையால் நடத்தப்படுகிறது.

இப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அந்த பள்ளில் வேலை செய்யும் பியூன் ஒருவர் காலி அறைக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மாணவி கதறியழுதார். இதைப் பார்த்த அவரது தோழி பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அவரது தாயாருக்குத் தகவல் கொடுத்தார்.

தீ வைக்கப்பட்ட வாகனம்

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் பள்ளியில் குவிந்தனர். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்து போலீஸார் விசாரணை நடத்தி பியூனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு திரண்ட கிராம மக்கள், குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

ஆனால், கூட்டத்தைக் கலைந்து போகுமாறு காவல் துறையினர் எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு தீ வைத்தனர். இதனால் போலீஸார் அங்கிருந்து கிராம மக்களைத் துரத்தியடித்தனர். வாகனத்திற்கு தீ வைத்த சிலரை கைது செய்துள்ளனர்.ர்.

கைது

மாணவியைப் பலாத்காரம் செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக ராயகடா எஸ்.பி விவேகானந்த சர்மா கூறியுள்ளார். காவல்துறை வாகனங்களைச் சேதப்படுத்தியவர்கள் மற்றும் தீ வைத்து எரித்தவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியால் பியூன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுமியை ராயகடாவின் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் பிதுலதா ஹுய்க்கா சந்தித்து பேசினார். அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரையும் சந்தித்தார். சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்த சம்பவத்தால் கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

x